Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பிரதமர் மோடியுடன் அதிமுக பிரமுகர்கள் பேச்சு; சசிகலா குறித்தும் கேள்வி?

    பிரதமர் மோடியுடன் அதிமுக பிரமுகர்கள் பேச்சு; சசிகலா குறித்தும் கேள்வி?

    சென்னையில் நேற்றைய முன்தினம் நடந்த அரசு விழாவில் கலந்து கொள்ள, பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். இவ்விழாவில், 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புமிக்க திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 5 திட்டங்களை நிறைவேற்றி நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதியதாக 6 திட்டங்களுக்கு அடிக்கல்லை நாட்டியும் பிரதமர் மோடி பேசினார்.

    சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில், அரசு நிகழ்ச்சி இரவு 7.30 மணியளவில் முடிந்தது. பிறகு பிரதமர் மோடி, காரில் சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். பிரதமர் மோடியை சந்திக்க, விமான நிலையத்தில் 30 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அந்த 30 நபர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், பிரதமரை சந்தித்து நினைவுப்பரிசு ஒன்றை வழங்கி வழி அனுப்பி வைத்தார்.

    பின்னர், அ.தி.மு.க. தலைவர்களை அங்கிருந்த முக்கிய பிரமுகர்கள் அறையில், பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், தங்கமணி மற்றும் வேலுமணி ஆகிய 5 பேரும் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தான் பாரதிய ஜனதா இடம் பெற்றிருக்கிறது. இதனால், அரசியல் சம்பந்தமாகவே இந்த சந்திப்பில் இரு தரப்பினரும் ஆலோசித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது.

    கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் வெற்றி பெற்றது. பா.ஜ.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கூட்டணியின் பலவீனம் தான் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, அ.தி.மு.க. தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார். மேலும், ‘உங்களுக்குள் இருக்கும் மனக்குறைகளை மனம் விட்டு பேசித் தீருங்கள். இருவரும் இணைந்து செயல்படுவது தான் நல்லது. அதுதான் அ.தி.மு.க.வின் எதிர்காலத்துக்கு நல்லது’ என்று அறிவுறுத்தி இருக்கிறார் பிரதமர் மோடி.

    தொண்டர்களுக்கு தலைமை மீது நம்பிக்கை வர வேண்டும். அப்போது தான் அவர்கள் சோர்ந்து போகாமல் இருப்பார்கள். மக்களும் நம்பிக்கை இழக்காமல் இருக்க நாம் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். கட்சியை பலப்படுத்துவதில் அதிக கவனத்தை செலுத்துங்கள் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

    இந்த சந்திப்பில், சசிகலா பிரச்சினையும் எழுப்பப்பட்டதற்கு, பிரதமர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. பின்னர் பிரதமர் மோடியிடம் அ.தி.மு.க. தலைவர்கள் விடைபெற்று சென்றார்கள்.

    வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், பாரதிய ஜனதா கூட்டணியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான அடித்தளம் தான் நேற்றைய சந்திப்பு என்று கூறப்படுகிறது.

     

    ‘மனநிலை மல்லாக்க கிடக்குது நண்பா’ – மனநிலையை தெரிஞ்சிக்க புது செயலி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....