Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநடிகர் ஷாருக்கான் மகனான ஆர்யன் கான் அப்பாவி: திசைமாறியது வழக்கு!

    நடிகர் ஷாருக்கான் மகனான ஆர்யன் கான் அப்பாவி: திசைமாறியது வழக்கு!

    இந்தி திரைப்பட உலகில், கொடி கட்டிப் பறந்தவர் நடிகர் ஷாருக்கான். இவரது மகனான ஆர்யன் கான், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். சினி உலகில், இந்த செய்தி காட்டுத் தீயாக பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில நாட்களாகவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆர்யன் கானுக்கு சாதகமான தீர்ப்பை நேற்று நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

    போதைப்பொருள் வைத்திருந்த காரணத்தால், கைதான பாலிவுட் நடிகரான ஷாருக்கானின் மகனான ஆர்யன் கான் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. மேலும், அவர் அப்பாவி எனவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.

    மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இருந்து, சுற்றுலாத் தலமான கோவாவிற்கு நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், அவருடைய நண்பர்கள் சிலருடன் சில தினங்களுக்கு முன் கப்பலில் சென்றுள்ளார். அப்போது, போதை பொருட்களையும் உடன் எடுத்துச் சென்றுள்ளனர். அந்த சமயத்தில், போதைப்பொருள் தடுப்பு காவல்துறை அதிகாரிகளிடம் வசமாக சிக்கினர். கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கும் மேல் ஆர்யன் கான் சிறையில் இருந்தார். தன் மீதான குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார். பிறகு, நிபந்தனையுடன் ஜாமினில் வெளியில் வந்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று சிறப்பு நீதிமன்றத்தில், 6,000 பக்க குற்றப் பத்திரிகையைப் போதைப்பொருள் தடுப்புக் காவல்துறை அதிகாரிகள் (என்சிபி) தாக்கல் செய்தனர். அதில், ஆர்யன்கானுக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லாததால், அவர் ஒரு அப்பாவி எனக் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக என்சிபி உயர் அதிகாரி சஞ்சய் குமார் சிங் கூறுகையில், ஆர்யன்கான் மற்றும் மொகக் ஆகிய இருவர் தவிர்த்து மற்ற அனைவரும் போதைப்பொருள் வைத்திருந்தனர். ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு எதிராக போதிய ஆதாரங்களை திரட்ட முடியவில்லை எனவும் அவர் கூறினார்.

    தாவரங்களுக்கு வலிக்குமா? என்ன சொல்கிறது ஆய்வு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....