Saturday, May 4, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இனி கூடுதல் டேட்டா!

    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இனி கூடுதல் டேட்டா!

    ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.265 ப்ரீபெய்ட் ரீஜார்ஜ் திட்ட முறையில் மாற்றம் செய்துள்ளது. 

    இந்தியாவை பொறுத்தவரையில் தொலைத்தொடர்பு பிரீபெய்ட் சேவையில் ஜியோ, வோடாஃபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களே முன்னிலை வகித்துவருகிறது.  இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே தன்வசம் இருந்த பிரீபெய்ட் திட்டத்தில் மேலும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

    ஏர்டெல் பிரீபெய்ட் முறையில் ரூ.265-க்கு ரீசார்ஜ் திட்டமுள்ளது. இத்திட்டத்தின்படி, வாடிக்கையாளர்கள் 28 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை பெற்றுவருகின்றனர்.

    இந்நிலையில், இந்தத் திட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி ரூ.265-க்கு ரீசார்ஜ் திட்டத்துக்கு  30 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் பெறுவர்.

    இந்த மாற்றத்தின் மூலம் ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் முன்பை விட கூடுதலாக இரண்டு நாள் சேவையையும், நாளொன்றுக்கு 500எம்பி டேட்டாவையும் பெறுவர்.

    தயார் நிலையில் 5ஜி ஏலம்- 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....