Sunday, March 17, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்தயார் நிலையில் 5ஜி ஏலம்- 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்

    தயார் நிலையில் 5ஜி ஏலம்- 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்

    இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் வருகிற 26-ம் தேதி நடைபெற உள்ளது. 

    ஒன்றிய அமைச்சரவை சமீபத்தில் தொலைதொடர்பு சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த ஒப்புதலின் அடிப்படையில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் வருகிற 26-ம் தேதி நடைபெற இருக்கிறது. 

    இந்த ஏலத்துக்கு ஜியோ, வோடஃபோன் ஐடியா, அதானி குழுமம் மற்றும் ஏர்டெல் ஆகிய நான்கு நிறுவனங்கள் இதுவரையில் விண்ணப்பித்துள்ளன. 

    ஜூலை 26-ம் தேதி நடைபெற இருக்கும் 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் 600 மெகாஹெட்ஸ், 700 மெகா ஹெட்ஸ், 800, 900 மெகா ஹெட்ஸ், 1800 மெகாஹெட்ஸ், 2100 மெகாஹெட்ஸ், 2300 மெகாஹெட்ஸ், 2500 மெகாஹெட்ஸ், 3000 மெகாஹெட்ஸ், 26 ஜிகாஹெட்ஸ் ஆகியவை ஏலம்விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    5ஜி அலைக்கற்றை ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம் வரும் 20 ஆண்டுகளுக்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுள் 72,097 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றை ரூபாய் 4.30 லட்சம் கோடிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் தொடருக்கான பணிகள் தீவிரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....