Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்184 பயணிகளுடன் பறந்த விமானம்; திடீரென பிடித்த தீ

    184 பயணிகளுடன் பறந்த விமானம்; திடீரென பிடித்த தீ

    அபுதாபியில் இருந்து காலிகட் நோக்கி சென்ற நடுவானில் 184 பயணிகளுடன் பறந்த ஏர் இந்தியா விமானம் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது. 

    அபுதாபி விமான நிலையத்தில் இருந்து காலிகட் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சுமார் 1000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தின் இன்ஜின் ஒன்றில் தீ பிடித்தது. இதனை கவனித்த விமானி, துரிதமாக செயல்பட்டு, விமானத்தை மீண்டும் அபுதாபி திருப்பி தரை இறக்கினார். 

    கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, இன்ஜின் ஒன்றில் தீ பிடித்ததாகவும், அப்போது விமானி அபுதாபி விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரை இறக்கியதாகவும், விமானத்தில் மொத்தம் 184 பயணிகளும் பாதுகாப்பாக இருந்ததாகவும் விமான இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் விமானம் அவரசமாக தரையிறக்கப்படுவது கடந்த ஒரு வாரத்திற்குள் இது 2-வது முறையாகும். 

    முன்னதாக, கடந்த ஜனவரி 29 ஆம் தேதி ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது ஹைடிராலிக் செயல் பகுதி செயலிழப்பு காரணமாக கொச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    சேவை வரியை எதிர்த்து ஏ.ஆர்.ரஹ்மான் தொடுத்த வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....