Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தளபதி 67: படக்குழு காஷ்மீருக்கு பறந்த வீடியோ வெளியானது..

    தளபதி 67: படக்குழு காஷ்மீருக்கு பறந்த வீடியோ வெளியானது..

    ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் காஷ்மீர் செல்லும் வீடியோ அதிகாரப்பூர்வமாக படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. 

    இதைத்தொடர்ந்து, இன்று மாலை 5 மணியளவில் ‘தளபதி 67’ படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. மேலும், இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட உள்ளதால், விஜய் ரசிகர்கள் ஆவலுடன் அந்த புரோமோவை எதிர்நோக்கியபடி உள்ளனர்.

    இந்நிலையில், ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் காஷ்மீர் செல்லும் வீடியோ அதிகாரப்பூர்வமாக படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

     மேலும், மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தில் த்ரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் மற்றும் மேத்யூ தாமஸ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. 

    ‘உலக கோப்பைக்குப் பிறகு எனது இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியது’ – மனம் திறந்த மெஸ்ஸி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....