Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெளியானது, தளபதி 67 திரைப்படத்தின் புரோமோ வீடியோ; குதூகலத்தில் ரசிகர்கள்!

    வெளியானது, தளபதி 67 திரைப்படத்தின் புரோமோ வீடியோ; குதூகலத்தில் ரசிகர்கள்!

    நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படத்திற்கு ‘லியோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயர் வைக்கப்பட்டது. 

    இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் ‘தளபதி 67’ படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படியே, தற்போது ‘தளபதி 67’ படத்தின் டைட்டில் ‘லியோ’ என்று வீடியோவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் லியோ திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் டைட்டிலை சமூகவலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர். மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் ‘தளபதி 67’ படத்தில் த்ரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் மற்றும் மேத்யூ தாமஸ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    தளபதி 67: படக்குழு காஷ்மீருக்கு பறந்த வீடியோ வெளியானது..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....