Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் விமானப்படை விமானங்கள் எரிந்து விபத்து

    மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் விமானப்படை விமானங்கள் எரிந்து விபத்து

    மத்திய பிரதேசத்தில் விமானப்படை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குளானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 ஆகிய விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. மொரானா என்ற பகுதியில் நடந்த இந்த விபத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

    முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஜெட் விமானம் விழுந்து விபத்துக்குளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அங்கு மீட்டுப் படையினர் விரைந்து சென்றுள்ளனர். 

    இந்தச் செய்தி உறுதி செய்யப்படுவதற்குள்ளாகவே, மத்திய பிரதேசத்தில் இரண்டு விமானங்கள் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சற்று நேரத்திற்குள் ஆகவே அடுத்தடுத்து மூன்று விமானங்கள் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த விபத்துகள் பனிமூட்டம் காரணமாக ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

    விக்னேஷ் சிவனுக்கு ‘நோ’ சொன்னாரா அஜித்குமார்? – ஏகே 62 குறித்து வெளிவந்த தகவல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....