Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகோடை விடுமுறைக்காக விமானக் கட்டணங்கள் கிடுகிடு உயர்வு

    கோடை விடுமுறைக்காக விமானக் கட்டணங்கள் கிடுகிடு உயர்வு

    கோடை விடுமுறை காலத்திற்கான விமான முன்பதிவு கட்டணங்கள் வெகுவாக அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கொரோனா பாதிப்புகள் நாட்டில் அதிகமாக இருந்தபோது, குறிப்பாக 2020 ஆம் ஆண்டில் விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பு ஒன்றை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் விதித்து இருந்தது. சூழல்களுக்கு ஏற்ப மாற்றப்பட்ட இந்த உச்ச வரம்பு 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 இல் ரத்து செய்யப்பட்டது. 

    இதன் பிறகு விமானக் கட்டணங்கள் படிப்படியாக உயரத் தொடங்கியது. அதன்படி, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறையின் சமயத்தில் வெகுவாக அதிகரித்தது. இப்போது விமானக் கட்டணங்கள் சற்று குறைந்துள்ள சூழலில், கோடை விடுமுறை காலத்திற்கான முன்பதிவு கட்டணங்கள் வெகுவாக அதிகரித்து காணப்படுகின்றன. 

    ஏப்ரல், மே மாதங்களில் சென்னை-கோவா பயணத்திற்கான கட்டணம் 4,400 ரூபாயாகவும், சென்னை-தில்லி கட்டணம் 6 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரித்து உள்ளது. 

    சென்னை-மதுரை கட்டணம் 4,000 ரூபாயாக அதிகரித்துள்ள நிலையில், சென்னை-துபாய் பயணக் கட்டணம் 16 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து காணப்படுகிறது. 

    திமுக அமைச்சர்களுக்கு சைக்கலாஜிக்கல் ட்ரீட்மெண்ட் தேவை- ஜெயக்குமார் அதிரடி பேச்சு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....