Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இடைத்தேர்தல் எதிரொலி; ஈரோட்டில் ஒரு இலட்சம் வரை வாடகை வசூல்!

    இடைத்தேர்தல் எதிரொலி; ஈரோட்டில் ஒரு இலட்சம் வரை வாடகை வசூல்!

    ஈரோடு கிழக்கு இடைதேர்தல் எதிரொலியாக அங்கு வாடகை வீடுகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

    காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வருகிற ஜனவரி 31 ஆம் தேதி தொடங்க உள்ளது. இருப்பினும் இப்போதிலிருந்தே அந்தத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 

    அந்தத் தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தேர்தல் முடியும் வரை அங்கேயே தங்கி இருக்க முடிவு செய்து, வாடகை வீடு எடுத்து தங்கி வருகின்றனர். 

    இதன் காரணமாக அங்கு வீடுகளின் வாடகை என்பது 10 ஆயிரம் தொடங்கி 50 ஆயிரம் வரை சொல்லப்படுகிறது. மேலும் பங்களா வீடு போன்று இருந்தால் ஒரு லட்சம் வரை வீட்டின் உரிமையாளர்கள் கேட்கின்றனர். 

    பெரிய கட்சிகளான திமுக, அதிமுக நிர்வாகிகள் அங்கு குவிந்து விட்டதால், சிறிய கட்சிகளின் நிர்வாகிகள் ஈரோடு நகர் பகுதியில் இருந்து சற்று தூரம் தள்ளி தங்கியிருக்கின்றனர். 

    அதேசமயம், டீக்கடை முதல் பெரிய ஓட்டல்கள் வரை அனைத்து கடைகளிலும் 200, 500, 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது. 

    தேர்தல் பிரச்சாரம் சிறிது அளவுகூட இன்னும் தொடங்காமல் இருக்கும் நிலையில், ஈரோடு நகர் பகுதி இப்போதே தேர்தல் கலை கட்டியுள்ளது. 

    தூக்கம் வருகிறதென கூறிய டிரைவருக்கு பாராட்டு மழை; இணையத்தில் நிகழ்ந்த சம்பவம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....