Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபணக்கார பட்டியலில் அதானியை பின்னுக்குத் தள்ளிய அமேசான் நிறுவனர்...எந்த இடத்தில் இப்போ அதானி?

    பணக்கார பட்டியலில் அதானியை பின்னுக்குத் தள்ளிய அமேசான் நிறுவனர்…எந்த இடத்தில் இப்போ அதானி?

    உலக பணக்காரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த அதானியை பின்னுக்குத் தள்ளி அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

    அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி. இவருக்கு வயது 60. உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர்களில் இவர் முக்கியமானவரும், முதன்மையானவரும் ஆவார். மேலும், அதானி உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இருப்பவர்.

    சமீபத்தில் போர்ப்ஸ் (forbes) ரியல் டைம் பில்லியனர்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எல்வி எம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி 155.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2-வது இடம் பிடித்தார் என்ற அறிவிப்பு வெளிவந்தது. 

    இதையும் படிங்க: வீட்டிற்கு திரும்பிய அன்பில் மகேஷ்.. குணமானதா காய்ச்சல்?

    இந்நிலையில், தற்போது ப்ளும்பெர்க் பில்லியனர் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, கௌதம் அதானி இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு இறங்கியுள்ளார். 

    தற்போதைய கணக்கின்படி, அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ் 138 பில்லியனுடன் இரண்டாவது இடத்திலும், கௌதம் அதானி 135 பில்லியனுடன் மூன்றாவது இடத்திற்கு கீழிறங்கி உள்ளார். 

    மேலும், எலான் மஸ்க் 245 பில்லியனுடன் முதலிடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....