Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்வீட்டிற்கு திரும்பிய அன்பில் மகேஷ்.. குணமானதா காய்ச்சல்?

    வீட்டிற்கு திரும்பிய அன்பில் மகேஷ்.. குணமானதா காய்ச்சல்?

    தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று வீடு திரும்பியுள்ளார். 

    தமிழகத்தில் தற்போது டெங்கு மற்றும் இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

    இதனால், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. 

    இந்நிலையில், சென்னை ஆழ்வாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இரண்டு நாட்களாவது மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியது.

    இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘பருவநிலை மாற்றம் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.’ என்றார். மேலும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார் . 

    இந்நிலையில், தற்போது சிகிச்சைக்கு பின்னர் அன்பில் மகேஷ் மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பியுள்ளார். மேலும், இவருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் குணமடைந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

    இதையும் படிங்க: 2030-ல் இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும்? உலக இதய தின சிறப்பு பதிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....