Saturday, March 16, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்2030-ல் இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும்? உலக இதய தின சிறப்பு பதிவு

    2030-ல் இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும்? உலக இதய தின சிறப்பு பதிவு

    நம் இதயம் ஆரோக்கியமாக இருப்பதன் முக்கியத்துவத்தைப் உணர்த்தும் விதமாகவும், அது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அவ்வப்போது கொண்டு சேர்க்கும் விதமாகவும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ஆம் தேதி உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது.

    இன்றைய கால கட்டத்தில் அதிகமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு, முக்கிய காரணியாக இருப்பது என்னவோ இதயம் தான். ஒவ்வொரு ஆண்டும் இதய பிரச்சனைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே 17.9 மில்லியன் ஆக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதிலும் 2030-ல் உலக அளவில் 2 கோடியே 30 லட்சம் பேர் இதய நோய் காரணமாக இறக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், இது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட அதிகம் என்றும் ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.

    அப்படிப்பட்ட நிலையில் நம் உடலில் உள்ள செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை வழங்குவதிலும், கழிவுப் பொருட்களை அகற்றுவதிலும் முக்கிய பங்கு வகிப்பது இதயம் தான். இதன் செயல்பாட்டில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அதனை அசாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக கவனம் செலுத்தி சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

    இதையும் படிங்க

    உலக இதய கூட்டமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோள் அதாவது கருப்பொருள் ஒன்று நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு உலக அளவில் இதய நோய்களைத் தடுப்பது, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் இதயத்தை பாதுகாப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே இதய தின கருப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது .

    உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் பருமன், நீரிழிவு, உணவு பழக்கம் மற்றும் புகைத்தல், மது போன்ற பல்வேறு காரணங்களால் தான் அதிகமான மாரடைப்பு ஏற்படுகின்றது. அதிலும் இளம் வயதினருக்கு அதிகமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. இதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவது, மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்வது, உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை தொடர்ந்து மேற்கொள்வது போன்றவற்றால் ஓரளவிற்கு இதயத்தை பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். அதிலும் இரவில் வெகு நேரம் மொபைல் பார்ப்பது, கணினி பயன்பாடு போன்றவற்றையும் குறைத்துக்கொண்டு சரியான அளவில் தூங்கி எழுந்தாலே பாதி அளவில் இதயம் சமநிலை பெற்று ஆரோக்கியமாக இருக்கும்.

    மேலும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், ஸ்டீராய்டுகள் மாத்திரைகளை அதிகமாக உட்கொள்ளுதல், உணவில் சமநிலை இல்லாமல் இருத்தல், அதிக கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உணவுகளை உட்கொள்ளுதல், மன அழுத்தம், சோர்வு, புகைப்பிடித்தல், தூக்கமின்மை, காஃபின், குறைந்த உடற்பயிற்சி ஆகியவற்றாலும் இதய நோய்கள் ஏற்பட முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் பட்டியலிடுகின்றனர். எனவே எப்போது உடல் ஆரோக்கியத்தில் விழிப்புடன் இருப்போம். இதயம் காத்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம். அனைவருக்கும் உலக இதய தின வாழ்த்துக்கள்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....