Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் தேர்வுக்கு எதிரான ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு - தமிழக அரசு...

    நீட் தேர்வுக்கு எதிரான ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு – தமிழக அரசு சாதிக்குமா?

    நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் ரீட் மனுவானது விசாரணைக்கு உகந்தது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். 

    நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தது. தற்போது, இந்த மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து விரிவான புள்ளிவிவரங்களை தமிழக அரசு விரிவாக ரிட் மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், இந்த மனுவானது விசாரணைக்கு உகந்தது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். 

    இதனால், நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி விசாரணைக்கு வருகையில், தமிழக அரசு எந்தளவிற்கு திறம்பட வாதிடப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் நீட் தேர்வுக்கு எதிரானவர்களிடத்தில் ஓங்கியுள்ளது. 

    இதையும் படிங்க:விரைவில் குரூப்-2 தேர்வு முடிவுகள் – அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....