Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி 5 சுவைகளில் கேக் தயாரிக்க ஆவின் திட்டம்...

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி 5 சுவைகளில் கேக் தயாரிக்க ஆவின் திட்டம்…

    தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேக் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. 

    தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் இந்த நிறுவனம்  இனிப்புகளை தயார் செய்து விற்பனை செய்யும். அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் தயாரித்து விற்பனை செய்ய உள்ளது. 

    மேலும் சென்னையில் மட்டும் கிறிஸ்துமஸ் கேக் மற்றும் பிளம் கேக் விற்பனை செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 5 சுவைகளில் கேக் தயாரிக்கப்பட இருக்கிறது.

    அதே சமயம் தனியார் கேக்குகளை விடவும் குறைந்த விலையில் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் குளிர்சாதன வசதி கொண்ட ஆவின் பார்லர்களில் மட்டுமே இந்த கேக்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. 

    இதுகுறித்து, ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையா தெரிவித்துள்ளதாவது:

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி ஆவின் சார்பில் 5 சுவைகளில் கேக் தயாரிக்கப்பட இருக்கிறது. இது தவிர பிளம் கேக்கும் தயாரிக்கப்படும். மற்ற நிறுவனங்களை விட தரத்துடன் விலை குறைவாக விற்கப்படும். 

    பொங்கலுக்கு 100 கிராம் நெய் பாக்கெட் 50 லட்சம் தயாரிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஏழை-எளிய மக்கள் பொங்கலை கொண்டாட நெய்யை பயன்படுத்தும் விதமாக அதிகளவில் தயாரிக்கப்பட இருக்கிறது.

    தற்போது 100 கிராம் நெய் 10 ஆயிரம் தான் தயாரிக்கப்படுகிறது. சேலத்தில் புதிய ஐஸ்கிரீம் பண்ணை நிறுவப்பட்டு உள்ளது. அதன் மூலம் தினமும் 6000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் தொடங்கப்படும்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    5 குடிசை வீடுகளில் திடீரென பற்றிய தீ! பதட்டமான ராமாபுரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....