Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'ஆதிபுருஷ்’ படத்தை தடை செய்ய வேண்டும்; இந்து அமைப்பினர், பாஜக எம்.எல்.ஏ எதிர்ப்பால் பரபரப்பு

    ‘ஆதிபுருஷ்’ படத்தை தடை செய்ய வேண்டும்; இந்து அமைப்பினர், பாஜக எம்.எல்.ஏ எதிர்ப்பால் பரபரப்பு

    500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தை  வெளியிட அனுமதிக்கமாட்டோம் என மராட்டிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் மிரட்டல் விடுத்துள்ளார். 

    நடிகர் பிரபாஸ், சைஃப் அலி கான் உள்ளிட்டோர் இணைத்து நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் 500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் வருகிற 12 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே கடும்மையான எதிர்ப்பை பெற்று வருகிறது. 

    மேலும். இந்தத் திரைப்படத்தின் டீசர் காட்சிகள் சமீபத்தில் வெளியானது. இதில் பிரபாஸ் ராமனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சன்னி சிங் லட்சுமணாகவும் நடித்துள்ளனர். இந்த டீசர் சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்தத்திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதால், அதனை மராட்டிய மாநிலத்தில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராம் கதம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    இதையும் படிங்க: ராஜராஜ சோழன் இந்து இல்லையா, சிரிப்பு தான் வருது? சர்ச்சை விவகாரத்தில் தமிழிசை கிண்டல்..

    இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    விளம்பரத்திற்காக இந்துக் கடவுள்களை அவமதித்ததன் மூலம் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கை மற்றும் மத உணர்வுகளை பட தயாரிப்பாளர்கள் புண்படுத்திவிட்டனர். மன்னிப்பு கேட்பதாலோ அல்லது காட்சிகளை வெட்டினாலோ மட்டும் விட்டுவிடமாட்டோம்.

    இது போன்ற மனநிலைக்கு தக்க பாடம் கற்பிப்பதோடு, இது போன்ற திரைப்படங்களை முற்றிலும் தடை செய்யவேண்டும். இத்திரைப்படத்தை மராட்டியத்தில் வெளியிட அனுமதிக்கமாட்டோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    இத்திரைப்படத்தின் டீசரில் வரும் ராவணன் கதாபாத்திரம் மொகலாய மன்னன் தைமூரை நினைவு படுத்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....