Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ராகுல் பயணத்தில் 'சாவர்க்கர்' சர்ச்சை? கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் பேனர் சலசலப்பு..

    ராகுல் பயணத்தில் ‘சாவர்க்கர்’ சர்ச்சை? கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் பேனர் சலசலப்பு..

    சாவர்க்கர் புகைப்படத்துடன் ராகுல் காந்தி இடம்பெற்றிருந்த பேனர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    ராகுல் காந்தி தற்போது பாரத் ஜோடோ யாத்திரை (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற ஒன்றை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடங்கியுள்ளார். இதன் நோக்கம் என்னவெனில் இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இவரின் இந்த பயணத்திற்கு பா.ஜ.க பல கருத்துகளை முன்வைத்து வருகிறது.

    ராகுல் காந்தியின் இந்த பயணமானது கடந்த மாதம் 7-ம் தேதி தனது நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, கேரளாவை கடந்து தற்போது கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கர்நாடகாவில் 6 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் ராகுலின் நடைபயணம்,  காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் இன்று ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டார். 

    இதையும் படிங்க:தாயின் ஷூ லேஸை கட்டிவிட்ட ராகுல் காந்தி; பாதயாத்திரையில் நெகிழ்ச்சி சம்பவம்!

    இதைத்தொடர்ந்து, இந்த யாத்திரை மண்டியா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இச்சூழலில், மண்டியா மாவட்டத்தில் சில இடங்களில் வீர சாவர்க்கர் புகைப்படத்துடன் ராகுல் காந்தி, சித்ராமையா, கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹாரிஸ் ஆகியோர் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பதாக சில பேனர்கள் இடம்பெற்றிருந்தன. 

    இந்த பேனர்கள் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அந்த இடங்களில் சென்று சர்ச்சைக்குரிய பேனர்களை அப்புறப்படுத்தினர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....