Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ராஜராஜ சோழன் இந்து இல்லையா, சிரிப்பு தான் வருது? சர்ச்சை விவகாரத்தில் தமிழிசை கிண்டல்..

    ராஜராஜ சோழன் இந்து இல்லையா, சிரிப்பு தான் வருது? சர்ச்சை விவகாரத்தில் தமிழிசை கிண்டல்..

    இனியும் அடையாளத்தை மறைக்க முயற்சி செய்தால் அது சரியாக இருக்காது என தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். 

    புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கோவை வந்திருந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘ராஜராஜ சோழன் இந்து இல்லை’ என்கிற விவாதம் குறித்து பேசினார். 

    ‘ராஜராஜ சோழன் இந்து இல்லை என்கிறார்கள். சிரிக்கலாமா வேண்டாமா என தெரியவில்லை. நான் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் தான் படித்தேன். திருநூறு, திலகம் வைத்திருந்த அவரின் திருவுருவத்தைப் பார்த்திருக்கிறேன். அடையாளங்களை மறக்கடிக்க பார்க்கிறார்கள்’ என்று தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க:அடங்காத வட கொரியா; தொடர் ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் ‘உச்சகட்ட போர் பதற்றம்’

    மேலும், தமிழிசை சௌந்தராஜன் பேசியதாவது :

    தமிழகத்தின் கலாசார அடையாளங்கள் நெடுங்காலமாக மறைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எல்லோரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். இந்து என்பது ஓர் கலாசார அடையாளம். உங்களுக்கு தேவைப்படுவது போல எல்லாவற்றையும் மாற்றிக் கொள்வதை ஏற்க முடியாது. நான் நேரடியாக சவால்விடுகிறேன். 

    தமிழ்நாட்டில் இருப்பது மாதிரியான கோயில்கள் பிற மாநிலங்களில் இருக்கின்றனவா.  தமிழ்நாட்டின் அடையாளம் இறைவழிபாடு. சைவம், வைணவம் இரண்டும் இந்து மதத்தின் அடையாளங்கள்தான். இனியும் அடையாளத்தை மறைக்க முயற்சி செய்தால் அது சரியாக இருக்காது.

    இவ்வாறு அவர் பேசினார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....