Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்வங்கதேசத்தில் ஆற்றில் மூழ்கிய கப்பல் - நடந்தது என்ன?

    வங்கதேசத்தில் ஆற்றில் மூழ்கிய கப்பல் – நடந்தது என்ன?

    கோதுமை ஏற்றிச் சென்ற சிறிய ரக சரக்கு கப்பல், வங்கதேசத்தின் மேக்னா ஆற்றில் மூழ்கியது. இதில் பல லட்சம் தானியம் நாசம்.

    வங்கதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, இந்தியாவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்து, அதை மாவாக்கி விற்பனை செய்து வருகிறது. இதற்காக, இந்தியாவிலிருந்து கோதுமையை ஏற்றிக் கொண்டு, வங்கதேசத்தக்கு சரக்கு கப்பல் ஒன்று சென்றது.

    சட்டோகிரம் துறைமுகத்தில் நின்ற அந்த கப்பலில் இருந்து 16 லட்சம் கிலோ கோதுமை, தனியார் நிறுவனத்தக்கு சொந்தமான சிறிய சரக்கு கப்பல் ஒன்றில் ஏற்றப்பட்டது. இந்தக் கப்பல், மேக்னா ஆற்றில் சென்று கொண்டிருந்த போது, இரும்பு பொருள் ஒன்றின் மீது மோதியதில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் கோதுமை முழுதுமாக நாசமடைந்தது.

    இது பற்றி வங்கதேச துறைமுக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    மேலும், ரஷ்யாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்து வரும் வங்கதேசம், இந்தாண்டு முதல் உக்ரைனில் இருந்தும் இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளது.

    உள்நாட்டில் கோதுமை விலை உயர்வதை தடுக்க, ஏற்றுமதி மீதான வரியை அதிகரிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதிய வங்கதேச அரசு, ரஷ்யாவுக்கு பதில் உக்ரைனில் இருந்து கோதுமை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.

    ரஷ்யா, வங்கதேசத்துக்கு 4 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய முடிவு செய்திருந்தது. இதுவரை 2 லட்சம் டன் மட்டுமே வழங்கியுள்ளது. மீதமுள்ள 2 லட்சம் டன்னை ரஷ்யா ஏற்றுமதி செய்ய வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், உக்ரைனை நாடியுள்ளதாக, வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.

    கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பயிர்கள் நாசமானதால் உணவு தானியத்தை இறக்குமதி செய்யும் முயற்சியில் வங்கதேசம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் பழங்களை சாப்பிட்டால் கோடையை தைரியமாய் எதிர்கொள்ளலாம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....