Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் - குரங்கு அம்மை வைரஸ்!

    விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் – குரங்கு அம்மை வைரஸ்!

    உலக அளவில் குரங்கம்மை வைரஸ் தொறின் தாக்கம் அதிகரிக்கும் வருகிறது. இதனையடுத்து உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் நூற்றுக்கணக்கானோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. இது அடுத்தடுத்த நாடுகளுக்கும் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கனடாவில் சிலருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    தற்போது அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர் சமீபத்தில் கனடாவில் இருந்து வந்துள்ளாா் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகள் அமெரிக்காவில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பரவி உள்ளதை உறுதி செய்துள்ளனர்.

    அந்த நபரின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குரங்கு அம்மை வைரஸ் பரவி வருவது குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் நடத்திய பரிசோதனையில் இந்தியாவில் சிலருக்கு இந்த நோய் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    குரங்கம்மை தொற்று மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகக் காணப்படும் வைரஸ் மூலம் பரவும் நோய். இது சின்னம்மையைப் போன்ற அரிய தொற்றுநோய். ஆனால் சின்னம்மையைவிட இதன் தாக்கம் சற்று குறைவு. மன்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் வன விலங்குகளை தாக்கக்கூடியவை. அபூர்வமாக மனிதர்களுக்கும் இந்த நோய் பரவும். இந்த நோய் மனிதரை தாக்கினால் 2 முதல் 4 வாரங்களுக்கு உடல்நல குறைபாடு ஏற்படும்.

    காய்ச்சல், தலைவலி, முகத்திலிருந்து தொடங்கி உடலுக்குப் பரவும் கொப்புளங்கள் போன்றவை இந்த தொற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள். குரங்கம்மையை ஏற்படுத்தும் வைரஸ் தோலின் மேற்புறத்தில் உள்ள உடைந்த உயிரிகள் மூலமாகவும், சுவாசக் குழாய் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது.

    மேலும் கண், காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ள மியூகோஸ் திசுக்கள் மூலமாக பரவக்கூடும். உலகையே கொரோனா தாக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வந்த நிலையில் தற்போது கனடா, பிரிட்டன், பெல்ஜியம், ஆஸி., ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

    உலகம் முழுவதும் குரங்கு அம்மை காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்தியாவில் நோய் பரவலை தடுக்க விமான நிலையங்கள், முக்கிய துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு நோய் பரிசோதனை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது. பரிசோதிக்கப்படும் மாதிரிகளை எங்கு சோதனைக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சூரி ஹேர்ஸ்டைல், க்யூட் பிரியங்கா மோகன், …ஆங்ரி சமுத்திரக்கனி – டான் திரைப்பட மீம்ஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....