Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்நில அபகரிப்பு, நில மோசடி சம்பந்தமாக புகார் செய்ய தனி காவல் நிலையம் வேண்டும்: ஓம்சக்தி...

    நில அபகரிப்பு, நில மோசடி சம்பந்தமாக புகார் செய்ய தனி காவல் நிலையம் வேண்டும்: ஓம்சக்தி சேகர்

    புதுச்சேரியில் நில அபகரிப்பு மற்றும் நில மோசடி சம்பந்தமாக புகார் செய்ய தனி காவல் நிலையம் அமைக்க வேண்டும் என ஓ.பி.எஸ். ஆதரவாளரும் முன்னாள் அதிமுக செயலாளருமான ஓம்சக்தி சேகர் புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாக சைபர் கிரைம் பிரிவுக்கு என்று புதிய காவல் நிலையத்தை புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் திறந்து வைத்துள்ளதை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வரவேற்கிறேன் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பல்வேறு சாதனைகளில் இதுவும் ஒன்றாகும். புதுச்சேரி மாநிலத்தில் சைபர் குற்றங்கள் போலவே நில அபகரிப்பு மற்றும் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி செய்தல், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் நிலங்கள் மற்றும் மனைகள் அதிக அளவில் அபகரிக்கும் சம்பவங்கள் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்று வருவது சமீப காலங்களில் தொடர்கதையாக உள்ளது.

    தற்போது பிரான்ஸ் சென்றுள்ள நமது புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் கூட பிரெஞ்சு மக்கள் புதுச்சேரியில் நடைபெறும் நில அபகரிப்பு சம்பந்தமாக புகார் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி அரசு நில அபகரிப்பை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் நில அபகரிப்பு என்பது தொடர்ந்து நடைபெறுகிறது. புதுச்சேரியில் உள்ள காவல் நிலையங்களில் குற்ற சம்பவங்களை காட்டிலும் நில அபகரிப்பு சம்பந்தமான புகார்களே அதிக அளவில் வருகிறது. குற்ற சம்பவங்களை தடுக்கும் காவல்துறைக்கு இந்த புகார்கள் மிகுந்த தலைவலியையும், பணிச்சுமையையும் அதிகப்படுத்துகின்றன.

    தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிலதா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நில அபகரிப்பு புகார் சம்பந்தமாக பொதுமக்கள் அச்சமின்றி புகார் செய்ய தனி அமைப்பை உருவாக்கினார். இதனால் ஏழை எளிய மக்களிடம் ஏமாற்றி வாங்கப்பட்ட பழைய நிலம் மீட்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்திலும் சைபர் க்ரைம் பிரிவு தொடங்கியது போல நில அபகரிப்பை தடுக்க தனி காவல் நிலையம் ஒன்றை புதுச்சேரி அரசு உருவாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். மேலும் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை தலைவராகக் கொண்டு இந்த பிரிவு செயல்பட வேண்டும் எனவும் புதுச்சேரி அரசை புதுச்சேரி மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    வட கொரியாவை அச்சுறுத்தும் நாடுகளுக்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி: அதிபர் கிம் ஜாங் எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....