Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உலகை மிரட்டும் புதிய வகை நோய் - அர்ஜென்டினாவில் நான்கு பேர் பலியான சம்பவம்

    உலகை மிரட்டும் புதிய வகை நோய் – அர்ஜென்டினாவில் நான்கு பேர் பலியான சம்பவம்

    அர்ஜென்டினாவில் ஏசி மூலம் பரவும் ‘லெஜியோனேயர்ஸ்’ என்ற புதிய வகை நுரையீரல் தொற்று நோயால் 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் வடமேற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது, சான்மிகுவல் டிடுகுமான் என்ற நகரம். இங்கு உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட, 70 வயது மூதாட்டி திடீரென பரிதாபமாக இறந்துள்ளார். அவரை பரிசோதித்த போது நுரையீரல் தொற்றை உண்டாக்கக்கூடிய ‘லெஜியோனேயர்ஸ்’ என்ற நோய் அவரிடத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இந்நோய் ஏசி மூலம் பரவக்கூடியது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், வேறு சிகிச்சைகளுக்காக அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த மேலும் மூன்று பேர் இதே லெஜியோனேயர்ஸ் தொற்று ஏற்பட்டு அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்துள்ளனர். அந்த மருத்துவமனையின் ஊழியர்கள் உட்பட மேலும் ஏழு பேருக்கு இந்த தொற்று கண்டுபிடிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

    இந்நோய் பாதித்த 4 பேரும், சான்-மிகுவல் டி-டுகுமான் நகரில் உள்ள ஒரே மருத்துவமனையில் காய்ச்சல, உடல்வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி, தொடர் சிகிச்சை வழங்கப்பட்டும், சிகிச்சை பலனளிக்காததாலேயே இருந்துள்ளதாகவும் அர்ஜென்டினாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த தொற்று நோய் பாக்டீரியாவால் உண்டாகக்கூடிய ஒருவகை நிமோனியா தொற்றாகும். நீர்த்துளிகளை சுவாசிக்கும்போதோ, ‘லெஜியோனேல்லா’ என்ற பாக்டீரியா கொண்ட தண்ணீரை குடித்தாலோ நுரையீரலில் தொற்று பரவுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த பாக்டீரியா அசுத்தமான நீர் அல்லது சுத்தம் செய்யப்படாத குளிர்சாதன இயந்திரங்களில் உருவாகிறது. இந்த வகை பாக்டீரியா தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. அதே நேரம், தொற்று பாதித்தவரிடம் இருந்து மற்றவர்களுக்கு அது பரவவில்லை என கூறப்படுகிறது.

    டுகுமான் நகரில் காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையுடன், லெஜியோனேயர்ஸ் பரிசோதனையும் நடத்தப்படுகிறது. காய்ச்சல், உடல்வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதே இந்த தொற்றின் அறிகுறி. அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் கடந்த 1976ம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்தின் படை பிரிவு வீரர்களிடையே ‘லெஜியோனேயர்ஸ்’நோய் முதன் முதலில் கண்டறியப்பட்டது.

    உலகில் தற்போது நோய்களுக்கு பஞ்சமில்லை என்று சொல்லும் அளவிற்கு இதுபோன்ற நோய்கள் உருவாகி வருவது மக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....