Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஆசியாவின் நோபல் பரிசையே புறக்கணித்த அமைச்சர்.. காரணம் இதுதான்!

    ஆசியாவின் நோபல் பரிசையே புறக்கணித்த அமைச்சர்.. காரணம் இதுதான்!

    ஆசியாவின் நோபல் பரிசை கேரள மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கேகே ஷைலஜா புறக்கணித்துள்ளார். 

    ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் மக்சேசே விருது கேரள மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கேகே ஷைலஜாவுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் அந்த விருதை ஏற்க மறுத்து பதில் கடிதம் எழுதியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    கேரள மாநிலத்தில் தற்போது இரண்டாவது முறையாக கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த பினராயி விஜயன் ஆட்சி காலத்தின் போது, கேகே ஷைலஜா சுகாதாரத்துறை அமைச்சராக வலம் வந்தார். இருப்பினும் கடந்த 2021 ஆம் ஆண்டு மீண்டும் பினராயி விஜயன் ஆட்சி அமைந்த பின், கேகே ஷைலாஜாவுக்கு அமைச்சர் வாய்ப்பு மறுக்கப்பட்டது. 

    இந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக, கேகே ஷைலஜாவுக்கு ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ரமோன் மக்சேசே விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.   

    மேலும் இதற்காக கேகே ஷைலஜாவுக்கு விருது வழங்கும் குழு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்திற்கு பதில் கடிதமாக விருதை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளார் ஷைலஜா.

    இதுகுறித்து, கேகே ஷைலஜா தெரிவித்துள்ளதாவது:

    ரமோன் மக்சேசே விருது வழங்கும் குழுவிலிருந்து எனக்கு கடிதம் வந்தது. சிபிஐஎம் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் என்பதால் கட்சியுடன் இது குறித்து ஆலோசித்தேன். இந்த ஆலோசனைக்குப் பின், விருதை ஏற்க வேண்டாம் என்று ஒருங்கிணைந்து முடிவு செய்தோம்.

    இந்த விருது தனிநபருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அரசியல் காரணங்களுக்காக, என்னால் இந்த விருதை பெற முடியாது. அதுமட்டும்மல்ல, கொரோனா காலத்தில் கூட்டு முயற்சியால் தான் சிறப்பாக செயல்பட முடிந்தது. அதனால், ஒரு தனிநபராக இந்த விருதை பெறமுடியாது என பதில் கடிதம் அனுப்பிவிட்டேன்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....