Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இருசக்கர வாகனத்துக்குள் புகுந்த நல்ல பாம்பு! போராடி மீட்ட வனத்துறை

    இருசக்கர வாகனத்துக்குள் புகுந்த நல்ல பாம்பு! போராடி மீட்ட வனத்துறை

    புதுச்சேரியில் இருசக்கர வாகனத்துக்குள் புகுந்த நல்ல பாம்பை வனத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர்.

    புதுச்சேரி நகரின் சுப்பையா சாலையில் கட்டுமான கடை நடத்தி வருபவர் திருமுருகன். இவர் வீட்டின் முன்பு டிவிஎஸ் 50 இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அப்பொழுது அருகில் உள்ள காலி மனையிலிருந்து பாம்பு ஒன்று வருவதை பொதுமக்கள் பார்த்தனர்.

    அந்தப் பாம்பு இருசக்கர வாகனத்திற்குள் நுழைந்து கொண்டது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வன ஊழியர் நாகராஜ் விரைந்து வந்து தேடிய போது பாம்பு கிடைக்கவில்லை.

    இதனால் இருசக்கர வாகனத்தின் பாகங்கள் ஒவ்வொன்றாய் பிரித்துப் பார்த்த பொழுது சீட்டுக்கு அடியில் இரண்டடி நீளம் உள்ள நல்ல பாம்பு தென்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்தப் பாம்பை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.

    புதுச்சேரியில் 26-ஆவது தேசிய புத்தக கண்காட்சி; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....