Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரியில் 26-ஆவது தேசிய புத்தக கண்காட்சி; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி

    புதுச்சேரியில் 26-ஆவது தேசிய புத்தக கண்காட்சி; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி

    புதுச்சேரியில் எழுத்தாளர்கள் புத்தகச் சங்கத்தின் சார்பில் 10 நாட்கள் நடைபெறும் 26-ஆவது தேசிய புத்தக கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

    புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கத்தின் சார்பில் 26-ஆவது தேசிய புத்தக கண்காட்சி 16 முதல் 25 வரை 10 நாட்கள் புதுச்சேரி வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இக்கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி முதலான இந்தியா பகுதிகளிலிருந்து 100 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில், பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கண்காட்சியில் இடம் பெறும் நூல்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கண்காட்சி நடைபெறும். பார்வையாளர்களுக்கு கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டி, வினாடி வினாபோட்டி, ஓவியப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு தினமும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    திறப்பு விழாவில் பேராசிரியர் பாஞ்ச்.ராமலிங்கம், தமிழ் சங்க தலைவர் முத்து, தமிழ் அறிஞர்கள் புலவர்கள் கண்காட்சி அமைப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

    “தேஜஸ்” எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்; ரயில்வே அமைச்சர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....