Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரியில் கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்துவதன் மூலம் கிடைக்கும் வருமானம் தேவையா; அதிமுக அன்பழகன் கேள்வி

    புதுச்சேரியில் கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்துவதன் மூலம் கிடைக்கும் வருமானம் தேவையா; அதிமுக அன்பழகன் கேள்வி

    புதுச்சேரியில் மதுபான தொழிற்சாலை மற்றும் கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்துவதன் மூலம் கிடைக்கும் வருமானம் தேவையா என ஒரு பெண்ணாக இருக்கும் துணைநிலை ஆளுநர் உணர வேண்டும் என அதிமுக அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரியில் மக்கள் விரோத ஆட்சி நடத்திய திமுக காங்கிரஸ் அரசை மாற்றி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பளித்துள்ளதாகவும், அந்த வாய்ப்பினை பயன்படுத்தி முதலமைச்சர் ரங்கசாமி சிறந்த நல்லாட்சியை வழங்கி வருகிறார் என்றும், இந்நிலையில் புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கும், ரெஸ்டோ பாருக்கும், மேலும் கலாச்சார சீரழிவை உருவாக்குகின்ற டிஜேக்கும், புற்றீசல் போல் பல மசாஜ் சென்டர், ஸ்பா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளிடம் இருந்த எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளனர். இதன் உச்சகட்டமாக கூட்டணியில் உள்ள பாஜக தலைவர் புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கும், புதிய மதுபான கடை உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும் என பத்திரிக்கை வாயிலாக தெரிவித்ததுள்ளதாகவும், கூட்டணி கட்சியிலேயே அரசுக்கு எதிரான இது போன்ற கருத்துகள் வெளிவந்துள்ளதால், நல்லாட்சி நடத்துகின்ற அரசுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதுதாக கூறினார்.

    எனவே அரசுக்கு திட்டமிட்டு அவப்பெயரை ஏற்படுத்த கூடிய இப்பிரச்சனையை கருத்தில்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் கூட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் முதலமைச்சர் ரங்கசாமி உடனடியாக கூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்த அவர், மாநிலத்தின் அதிக வருவாய்க்காக புதிய டிஸ்லரி வழங்க அரசு முடிவெடுத்திருந்தால் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இத்தொழிலை நடத்த அனுமதி வழங்கி இருக்காலாம். ஆனால் புதுச்சேரியை தாண்டி அண்டை மாநிலமான தமிழகம், கர்நாடகம் போன்றவர்களுக்கு டிஸ்லரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இத்தொழிலில் ஈடுபட்டு வரும் திமுகவை சேர்ந்த 3 நபர்கள் புதுச்சேரியில் டிஸ்லரி தொழில் தொடங்க அனுமதி பெற்றுள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டிய அவர், புதுச்சேரியில் ஸ்பா, மசாஜ் சென்டர், என்ற பெயரில் விபச்சாரம் நடைபெற்று வருகிறது.

    இதுபோன்ற நபர்களுக்கு அனுமதி வழங்கியது யார்? இது மாதிரியான தொழில் மூலம் அரசுக்கு வருமானம் வருவது அவசியமா? இப்பிரச்சனையில் ஒரு பெண்ணாக இருக்கிற துணைநிலை ஆளுநர் அவர்கள் நேரிடையாக தலையிட்டு புதுச்சேரி மாநிலத்திற்கு கலாச்சார சீரழிவு ஏற்படுத்தும் எந்தவிதமான சட்டவிரோத செயல்களையும் அனுமதிக்க கூடாது என கேட்டுக்கொண்டார்.

    அரசு இவ்விகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக தலைமை் கழக அனுமதி பெற்று போராட்டம் நடத்த்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நெய்யின் விலையை உயர்த்திய ஆவின் நிறுவனம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....