இந்திய பிரதமர் மோடி அவர்க் தனக்கென ஒரு வலையொளி அலை வரிசையை (youtube channel) வைத்திருக்கிறார்.அந்த வலையொளி அலை வரிசையில் பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டிகளும், மேடைப்பேச்சுகளும், இந்தி திரைப்படத்துறையினருடான கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.
இப்படியான காணொளிகளை உடைய இந்திய பிரதமர் மோடி அவர்களின் வலையொளி அலை (youtube channel) தற்போது ஒரு கோடி சந்தாதாரர்களை (subscribers) பெற்றுள்ளது. வலையொளி அலை ஒரு கோடி சந்தாதாரர்களை பெற்றதின் மூலம் உலக தலைவர்களில், அதிக சந்தாதாரர்களை பெற்ற தலைவர் என்ற பெருமையை மோடி அவர்கள் பெற்றுள்ளார்.
வலையொளி சந்தாதாரர்களை அதிகம் பெற்ற தலைவர்களின் வரிசையை பார்ப்போமேயானால், இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஒரு கோடி சந்தாதாரர்களுடன் முதல் இடத்திலும், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா அவர்கள் 36 லட்சம் சந்தாதாரர்களுடன் இரண்டாவது இடத்திலும், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மேனுவல் லோபஸ் 30.7 லட்சம் சந்தாதாரர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.