Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்தனது வலையொளி அலை வரிசையால், உலக அளவில் முதல் இடம் பிடித்த இந்திய பிரதமர் மோடி!

    தனது வலையொளி அலை வரிசையால், உலக அளவில் முதல் இடம் பிடித்த இந்திய பிரதமர் மோடி!

    இந்திய பிரதமர் மோடி அவர்க் தனக்கென ஒரு வலையொளி அலை வரிசையை (youtube channel) வைத்திருக்கிறார்.அந்த வலையொளி அலை வரிசையில் பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டிகளும், மேடைப்பேச்சுகளும், இந்தி திரைப்படத்துறையினருடான கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது. 

    youtubeஇப்படியான காணொளிகளை உடைய இந்திய பிரதமர் மோடி அவர்களின் வலையொளி அலை (youtube channel) தற்போது ஒரு கோடி சந்தாதாரர்களை (subscribers) பெற்றுள்ளது. வலையொளி அலை ஒரு கோடி சந்தாதாரர்களை பெற்றதின் மூலம் உலக தலைவர்களில், அதிக சந்தாதாரர்களை பெற்ற தலைவர் என்ற பெருமையை மோடி அவர்கள் பெற்றுள்ளார்.

    வலையொளி சந்தாதாரர்களை அதிகம் பெற்ற தலைவர்களின் வரிசையை பார்ப்போமேயானால், இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஒரு கோடி சந்தாதாரர்களுடன் முதல் இடத்திலும், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா அவர்கள் 36 லட்சம்  சந்தாதாரர்களுடன் இரண்டாவது இடத்திலும், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மேனுவல் லோபஸ் 30.7 லட்சம் சந்தாதாரர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....