Monday, March 18, 2024
மேலும்
    Homeவாகனம்சுசூகி நிறுவனத்தின் அடுத்த ஸ்போர்ட்ஸ் பைக் : இந்திய சாலைகளுக்கென பிரத்யேக வடிவமைப்பு!

    சுசூகி நிறுவனத்தின் அடுத்த ஸ்போர்ட்ஸ் பைக் : இந்திய சாலைகளுக்கென பிரத்யேக வடிவமைப்பு!

    தன்னுடைய புதிய ஸ்போர்ட்ஸ் ரக பைக்கை டெல்லியில் அறிமுகம் செய்தது சுசூகி நிறுவனம். 

    இந்தியாவின் முன்னணி மோட்டார் நிறுவனமான சுசூகி நிறுவனம் தன்னுடைய சுசூகி 250சிசி ஸ்போர்ட்ஸ் அட்வெஞ்சர் டூரர் வி-ஸ்டார்ம் எஸ்எக்ஸ் பைக்கை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது. இந்த பைக்கின் இந்திய விலையாக ரூபாய் 2.11 லட்சத்தை நிர்ணயித்துள்ளது சுசூகி நிறுவனம். இதன் மூலம் சுசூகி நிறுவனம் தன்னுடைய ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் புதிய இடத்திற்கு முன்னேறுகிறது. 

    தினமும் நீண்ட நேரம் பயணம் செய்யும் ரைடர்களுக்கு இந்த பைக் மிகவும் ஏற்புடையதாக இருக்கும். மேலும், நெடுஞ்சாலைகள் மற்றும் கரடு முரடான நிலப்பரப்புகளில் பயணம் செய்வதற்கு இது மிகவும் அற்புதமான பைக்காக இருக்கும். இது அட்வெஞ்சர் விரும்பிகளுக்கு ஏற்ற முறையில் சிறப்பாக இருக்கும் என சுசூகி நிறுவனம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.    

    இந்த வி-ஸ்டார்ம் எஸ்எக்ஸில்  249சிசி எஞ்சின் (Engine) பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்குகளில் அதிக போக்குவரத்து நிறைந்த பகுதிகள் முதல் தேசிய நெடுஞ்சாலைகள் வரை அனைத்திலும் பயணம் செய்ய ஏதுவான முறைகள் காணப்படுகின்றன. அதற்கு ஏற்ற வகையில் தான் இதன் எஞ்சினும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    முற்றிலும் புதிதான இந்த வி-ஸ்டார்ம் எஸ்எக்ஸ் ஸ்போர்ட்ஸ் பைக் நீண்ட தூரம் பயணம் செய்யும் அட்வெஞ்சர்களுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும், இது நகரம் முதல் நீண்ட வெளியூர் பயணம் வரை அனைத்திலும் இதன் பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் சுசூகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சடோஷி உச்சிகா.

    இன்றைய நிலையில் மோட்டார் பைக்குகள், உரிமையாளரின் தனித்தன்மையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு நவீன நண்பர்களாகி உள்ளன என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இன்றைய நிலையில் மோட்டார் பைக்கை தேர்ந்தெடுப்பதில் அனைவரும் மிகவும் அக்கறை செலுத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். 

    எங்களுடைய இந்த வி-ஸ்டார்ம் எஸ்எக்ஸின் செயல்பாட்டின் மீது எங்களுக்கும் அபாரமான நம்பிக்கை உள்ளது. ஏனெனில் இதை இந்திய பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில்தான் தயார் செய்துள்ளோம். இன்றைய இந்திய ரைடர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இந்த புதிய வி-ஸ்டார்ம் எஸ்எக்ஸ் அமையும் என தெரிவித்துள்ளார் சடோஷி உச்சிகா.  

    இந்த புதிய சுசூகி ஸ்போர்ட்ஸ் 250சிசி வி-ஸ்டார்ம் எஸ்எக்ஸ் பைக்குகள் இந்தியா முழுவதும் உள்ள சுசூகி ஷோரூம்களில் கிடைக்கும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....