Monday, March 18, 2024
மேலும்
    Homeவாகனம்விரைவில் வருகிறது, மேம்படுத்தப்பட்ட மாருதி எர்டிகா - புக்கிங்கிற்கு தயாரா?

    விரைவில் வருகிறது, மேம்படுத்தப்பட்ட மாருதி எர்டிகா – புக்கிங்கிற்கு தயாரா?

    இந்தியாவை பொறுத்தவரையில் வாகன (ஆட்டோ மொபைல்) உற்பத்தியில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்ககிறது. குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களில் வாகனங்களின் உற்பத்தி பெருகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உற்பத்தி மட்டுமல்லாது, புதிய வகை வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படுத்தலும், மறு உருவாக்கம் செய்யப்பட்டவை அறிமுகப்படுத்தப்படுத்தலும் அதிகமாகி வருகின்றன.

    அவ்வகையில், மாருதி சுஸுகி இந்தியாவில் புதியதாய் ஒரு மறு உருவாக்கத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த மறு உருவாக்கம் நிகழ்ந்திருப்பது எர்டிகா காரில்தான். ஆம்! மாருதி சுஸுகி எர்டிகாவில் மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது. 

    நிகழ்ந்திருக்க கூடிய மாற்றங்கள் பெரிய வகையிலான மாற்றங்கள் அல்ல, அனைத்தும் சிறிய வகையிலான மாற்றங்களே! குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் காரின் முன் பக்க கிரில்களும், முன்பக்க முகப்பு விளக்குகளும்(headlight), பின்புற விளக்குகளிலும் (tail lights) குறிப்பிட்ட வகையில் மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது சுசுகி நிறுவனம்.

    மேலும், முன்னும் பின்னும் புதிய பம்பர்கள் வைக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. விளக்குகளை (lights) பொறுத்தவரையில் பலோனா காரில் இருப்பதைப்போன்றுதான் எர்டிகாவில் நிறுவப்பட்டுள்ளன. 

    இவைகள் மட்டுமல்லாது வெளிவர இருக்கும் புதிய எர்டிகாவில், மேம்படுத்தப்பட்ட செய்யப்பட்ட பவர்டிரெயின், அதிவேக தானியங்கி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்டவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

    காரின் உள்ளமைப்பை பொறுத்தமட்டில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இருக்கை அளவுகளில் மட்டும் மாற்றங்களை நிகழ்த்தியிருக்கின்றனர். முந்தைய எர்டிகாவின் இருக்கை அளவை விட இந்த புதிய வகைப்பாட்டில் இருக்கை அளவு பெரிதாக்கப்பட்டுள்ளது. 

    அனைத்து மூன்று வரிசை இருக்கைகள் அமைப்புகளுக்கும் 12 வோல்ட் சார்ஜிங் போர்ட் வழங்கப்பட இருக்கின்றது. மேலும், அட்ஜஸ்டபிள் மற்றும் முன் பக்கத்தில் மடிக்கும் வசதிக் கொண்ட விங் ரக கண்ணாடிகளும் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் அம்சமும் 2022 எர்டிகாவில் இடம் பெறுவதாய் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மாற்றங்கள் நிகழ்ந்தாலும் எர்டிகாவின் சிறப்பாக பார்க்கப்படும், சுஸுகி இணைப்பு வசதிக் கொண்ட  ஸ்மார்ட் பிளே திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், தானியங்கி வானிலை அளவீடுகள், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட அம்சங்கள் இக்காரிலும் இடம் பெற்றுள்ளன. 

    இந்தியாவை பொறுத்தவரையில் மாருதி என்ற பெயருக்கே நன்மதிப்பு கால காலம் காலமாய் இருந்து வருகிறது. அந்த நன்மதிப்பை இன்னும் மேம்படுத்தும் வகையில்தான் எர்டிகாவில் சிறப்பம்சங்கள் செய்யப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. 

    இந்த எர்டிகாவின் புக்கிங் விலை 11,000 ரூபாயாக விதிக்கப்பட்டுள்ளது. அதிகார்ப்பூர்வமாக இந்த மாதத்திற்குள் மாருதி சுஸுகி எர்டிகா 2022 அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்ப்பாரக்கப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....