Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? வாருங்கள் தெரிந்துக் கொள்வோம்!

    வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? வாருங்கள் தெரிந்துக் கொள்வோம்!

    அடிக்கும் வெயிலுக்கு ஒரு பிஞ்சு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்பீர்கள். அப்படி நாம் வெயில் காலத்தில் சாப்பிட்டால் மட்டும் போதாது வாரத்திற்கு இரண்டு மூன்று முறையேனும் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வாருங்கள் தெரிந்துக் கொள்வோம் வெள்ளரிக்காயின் பயன்களை…

    உடலின் நீர்ச்சத்து:

    வெள்ளரிக்காயில் 95% நீரால் தான் நிரம்பியுள்ளது. இதை சாப்பிடுவதால் உடலின் நீச்சத்தின் அளவை உயர்த்துகிறது. அதுவும் இந்த வெயில் காலத்தில் வியர்வையின் மூலம் அதிக நீர் உடலைவிட்டு வெளியே செல்கிறது. உடல் வெப்பத்தை குறைக்கவும் உடல் வெப்பநிலையைச் சீராக வைக்கவும் வெள்ளரிக்காய் உதவுகிறது. தண்ணீர் தாகம் எடுக்கிறது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் போதவில்லை என்பவர்கள் நிச்சயம் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் சரியாக இருக்கும். 

    உடல் எடையை குறைக்க: 

    வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் இருப்பதால் இது உடல் எடையை குறைக்க உதவும். மேலும் இது வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வை தருவதால் அதிகனா கலோரிகள் கொண்ட உணவுகளை நம்மால் தவிர்க்க முடியும். இதனால் உடல் எடையையும் குறைக்க முடியும். 

    இதய பாதுகாப்பிற்கு: 

    இயற்கையாகவே வெள்ளரிக்காய் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதில் கொழுப்பு சத்து என்பதே இல்லை. நீர்ச்சத்து, நார்ச்சத்து, ஆக்சிஜினேற்ற மூலப்பொருள்கள், பொட்டாசியம் மிகுந்ததாக வெள்ளரிக்காய் இருக்கிறது. இதன் மூலம் இரத்த கொழுப்பின் அளவை பாதுகாக்கிறது. இதனால் வெள்ளரிக்காய் இதயத்தின் செயல்களைச் சீராக வைக்க உதவுகிறது.

    நோய் எதிர்ப்பு சக்திக்கு: 

    வெள்ளரிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது. தேவையற்ற கிருமிகளை உடலில் இருந்து நீக்க உதவுகிறது. மேலும் இதில் ஆக்சிஜனேற்ற (antioxidants) மூலப் பொருளான பிளவனோய்ட்ஸ் (flavonoids) போன்றதையும் உள்ளடக்கியது. மேலும் புற்றுநோய்,இருதயநோய், நீரிழிவு நோய், மூட்டுவலி போன்றவை வரமால் தடுக்க உதவுகிறது. 

    வாய் துர்நாற்றத்திற்கு: 

    வெள்ளரிக்காய் வாயில் வெளிவரும் துர்நாற்றத்தை போக்குகிறது. வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளால் தான் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. வெள்ளரிக்காய் வயிற்றில் ஏதேனும் புண்கள் இருந்தால் ஆற்ற உதவும். வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து மற்றும் வைட்டமின் சி சத்து போன்றவை உள்ளதால் இது பல் மற்றும் ஈர்களைப் பாதுகாக்க உதவும். மேலும் நல்ல பாக்டீரியாவை இது உருவாக்க வல்லது. 

    எலும்பு சக்திக்கு: 

    வெள்ளரிக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் கே, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் இது எலும்புகளின் வளர்ச்சிக்கும் சக்திக்கும் மிகவும் உதவுகிறது. மேலும் வெள்ளரிக்காய் எலும்பு திடத்தை சரியாக வைத்திருக்க உதவுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கிறது. 

    சரும ஆரோக்கியத்திற்கு: 

    வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் இது சருமத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. தண்ணீர் இல்லாமல் வறண்டு போவதைக் குறைக்கிறது. 

    கண் ஆரோக்கியத்திற்கு: 

    கண்ணின் ஈரப்பதத்தை வறண்டு விடாமல் பாதுகாக்க வெள்ளரிக்காய் அதிகம் உதவுகிறது. மேலும் வெள்ளரிக்காய் கண்களின் கருவிழி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். 

    இப்போ உடனே எங்க போறீங்க வெள்ளரிக்காவை சாப்பிட தானே!

    இதையும் படியுங்கள்… கோடையின் கொடைக் கனி மாம்பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....