Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசென்னையில் அறிமுகமான 5ஜி சேவை; மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்

    சென்னையில் அறிமுகமான 5ஜி சேவை; மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்

    சென்னை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் ஏர்டெல் அறிமுகப்படுத்திய 5ஜி சேவை நேற்று வியாழக்கிழமை அமலுக்கு வந்தது. 

    இந்நிலையில்  5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய கைப்பேசிகளை வைத்தோருக்கும் நிறுவனத்தின் தற்போதைய வாடிக்கையாளர்கள், கூடுதல் கட்டணம் இல்லாமல், பழைய 4 ஜி திட்டங்களைப் பயன்படுத்தியே இந்த 5ஜி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயலதிகாரியுமான கோபால் விட்டல்  தெரிவித்துள்ளதாவது:

    இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப புரட்சியில் ஏர்டெல் கடந்த 27 ஆண்டுகளாகவே முன்னணியில் இருக்கிறது. எங்களது பயணத்தில் இந்த 5ஜி சேவை அறிமுகம் முக்கியமான முன்னேற்றம்.

    இதையும் படிங்க: 2 வாரங்களில் துவங்க இருக்கும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் எப்படி இருக்கும்?

    நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் 5ஜி கைப்பேசி இருந்தால், அவர்களிடம் தற்போது வைத்திருக்கும் சிம் அட்டைகளைப் பயன்படுத்தியே புதிய சேவைகளைப் பெறலாம். 

    5ஜி நெட்வொர்க் சேவை முதற்கட்டமாக டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ஐதராபாத், லக்னோ, புனே, சண்டிகர், காந்திநகர், குருகிராம், ஜாம்நகர், அகமதாபாத் உள்ளிட்ட 13 நகரங்களில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

    இந்நிலையில், நேற்று முதல் அந்தச் சேவை அமலுக்கு வந்துள்ளது.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....