Saturday, March 16, 2024
மேலும்
    Homeவானிலை2 வாரங்களில் துவங்க இருக்கும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் எப்படி இருக்கும்?

    2 வாரங்களில் துவங்க இருக்கும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் எப்படி இருக்கும்?

    தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

    தமிழகத்தில் கடந்த மே மாதம் 29ஆம் தேதியன்று தொடங்கிய தென் மேற்கு பருவ மழை, எதிர்பார்த்த அளவை விட அதிகமாகவே பெய்துள்ளது. இந்த பருவமழை காலத்தில் மழையானது தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் தான் அதிகமாக பெய்யும்.

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையானது இந்த ஆண்டு இயல்பை காட்டிலும் அதிகமாவே பெய்துள்ளது . தென் மேற்கு பருவமழை இன்னும் இரண்டு வாரங்களில் அதாவது அக்டோபர் 15-ஆம் தேதியோடு முடிவுக்கு வர உள்ள நிலையில் , இம்மாத இறுதியில் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவித்து உள்ளார்.

    பொதுவாகவே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கும் . இந்த பருவமழை காலத்தில் தான், தமிழகத்திற்கு குறிப்பாக சென்னைக்கு தேவையான நீர் ஆதாரம் முழுமையாக கிடைக்கும் . இந்த சமயத்தில் கிடைக்கும் மழை நீர் மூலம் தான் தமிழகத்தின் வட மாவட்டங்களில் விவசாயம், குடிநீர் தேவை உள்ளிட்ட அனைத்துமே பூர்த்தியாகும்.

    இதையும் படிங்க: அமெரிக்காவில் இந்திய குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்; பிஞ்சு குழந்தையை கூட சுட்டு கொன்ற கொடூரர்கள்

    இதனால் இந்த கால கட்டங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழை , தமிழகத்தில் வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளிலுமே தீவிரம் காட்டும். இதனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்காலத்தில், இயல்பான மழை அளவைவிட 35 முதல் 75 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, அரசு அதிகாரிகளுடன் அமைச்சர்கள் துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    பருவமழையின் போது ஏற்படக்கூடிய பேரிடர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அரசுக்கு தெரிவிப்பதற்காக அரசு பேரிடர் கட்டுப்பாட்டு மையங்களையும் தயார்படுத்தி வருகின்றனர் .

    தமிழகத்தில் தற்போது டெங்கு தீவிரமாக பரவி வருவதால் ,மழை நேரங்களில் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ,பள்ளி கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களை முன்கூட்டியே கள ஆய்வு செய்து அவற்றை அகற்றும் வேளைகளில் இறங்க வேண்டும் ,திறந்த நிலை கிணறுகள், நீர்நிலை தொட்டிகளை மூடி வைப்பது , மின் இணைப்பு சரியாக உள்ளதை உறுதிப்படுத்துவது , தண்ணீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    அதேபோல் புயல் போன்ற மிகப்பெரிய பேரிடர்கள் ஏற்படும் களங்களில் அதன் தாக்கத்தை குறைத்திடவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது .

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....