Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமுழுவதும் எரியாத ராவணன்...பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நகராட்சி ஊழியர்

    முழுவதும் எரியாத ராவணன்…பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நகராட்சி ஊழியர்

    தசரா கொண்டாட்டத்தின்போது ராவணனின் உருவ பொம்மை சரியாக எரியாததால் நகராட்சி ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கடந்த புதன்கிழமை தசரா விழாவானது கொண்டாடப்பட்டது. மக்களும் ஆர்ப்பரித்து தசராவை கொண்டாடினர். இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை தசரா விழா கொண்டாடப்பட்டது. இதிகாசத்தின்படி ராமர் ராவணனை வதம் செய்யும் நிகழ்வு இரவில் நடைபெற்றது.

    இந்த விழாவில் ராவணனின் உருவ பொம்மையை ஏற்பாடு செய்யும் பணியை நகராட்சி நிர்வாகம் கவனித்திருக்கிறது. ஆனால், ராவண வதத்தின்போது ராவணனின் பத்து தலைகள் சரியாக எரியவில்லை. இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. 

    இதையும் படிங்க:தீபாவளி பண்டிகை முன்னிட்டு பேருந்துகளில் முன்பதிவு 50 ஆயிரத்தை எட்டியது

    இதனால், இந்த நிகழ்வுக்கு பொறுப்பாளாராக நியமிக்கப்பட்ட நகராட்சி எழுத்தரான ராஜேந்திர யாதவ் என்பவரை மாவட்ட நகராட்சி நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது.

    மேலும், அவருடைய அலட்சியத்தால் நகராட்சி ஆணையத்திற்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாலே இந்த பணியிடைநீக்கம் என நகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....