Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா63 வயதில் 53 திருமணம் - சண்டையில் இருந்து தப்பிக்க இப்படியொரு முடிவா?

    63 வயதில் 53 திருமணம் – சண்டையில் இருந்து தப்பிக்க இப்படியொரு முடிவா?

    சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவர் தனக்கு 53 மனைவிகள் இருப்பதாக தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

    இந்த அனுபவம் குறித்து சவுதிக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு அப்துல்லா என்ற நபர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    முதன்முதலாக நான் ஒரு பெண்ணை திருமணம் செய்தேன். நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கினோம். ஆனால், அதன் பிறகு எங்களுக்குள் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், தகராறு, மன வருத்தம் போன்றவை இருந்த காரணத்தினால் அதிலிருந்து விடுபட, நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன்.

    என் முதல் மனைவியால் ஏற்பட்ட மனரீதியான பாதிப்புக்கு இரண்டாவது மனைவி மருந்தாக பயன்பட்டார். ஆனால், அதன் பின்பும் இரண்டாவது மனைவியுடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முதல் மனைவிக்கும் இரண்டாவது மனைவிக்கும் கருத்து ஒத்துப் போகவில்லை. இதனால், நான் இரண்டு மனைவிகளுடன் ஏற்பட்ட பிரச்சினைகளை மறக்க மூன்றாவது திருமணம் செய்து கொண்டேன்.

    இப்படி ஒவ்வொரு மனைவியையும் விவாகரத்து செய்துவிட்டு, மொத்தம் 53 திருமணம் வரை செய்து கொண்டேன். ஆனால் இதில் ஒன்று மட்டும் உறுதி உடல் சுகத்துக்காக நான் இத்தனை திருமணங்களை செய்து கொள்ளவில்லை. நான் மனரீதியாக நிம்மதியாக இருக்க வேண்டும். மன தைரியத்துடன் இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் இத்தனை திருமணங்களை செய்து கொண்டேன்.

    அதிலும் வயது முதிர்ந்த பெண்ணை திருமணம் செய்வதன் மூலம் மன தைரியம் உருவாகிறது. நான் திருமணம் முடித்த அத்தனை பெண்களும் பேரழகு.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    திருமணம் செய்த எல்லா மனைவிகளுடன் தகராறு ஏற்பட்டதால் அடுத்தடுத்த திருமணங்களை செய்துள்ளார் அப்துல்லா. அதே சமயத்தில் எந்த பிரச்சனையையும் மனைவியுடன் பேசி தீர்த்துக் கொள்ள அப்துல்லா விரும்பவில்லை.

    மன நிம்மதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே அடுத்தடுத்த திருமணங்களை அப்துல்லா செய்திருப்பது பலரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: மன்னிப்பு கேட்டும் கோபப்பட்ட ஆசிரியை.. முத்தம் கொடுத்து சமாதானம் செய்த மாணவன் – வைரல் வீடியோ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....