Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஒரு நாளில் 44 செ.மீ. மழை பதிவு! வரலாறு காணாத மழையால் மிதக்கும் 'சீர்காழி' மக்கள்...

    ஒரு நாளில் 44 செ.மீ. மழை பதிவு! வரலாறு காணாத மழையால் மிதக்கும் ‘சீர்காழி’ மக்கள் அவதி

    சீர்காழியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43.6 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. 

    வங்கக் கடலில் நிலவு காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி தொடங்கி இரவு முழுவதும் கனமழை பெய்தது. 

    கனமழை காரணமாக சீர்காழியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43.6 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. மேலும் கொள்ளிடத்தில் 31 சென்டி மீட்டரும், செம்பனார் கோயில் பகுதியில் 24 சென்டி மீட்டர் மழையும், பொறையார் பகுதியில் 18 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது. 

    தேனூர், கொண்டால், புங்கனூர், தில்லைவிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உப்பனாற்று பகுதியில் அமைந்துள்ளன. கனமழை காரணமாக உப்பனாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேலும் நாங்கூர், திருநகரி, நெய்த்தவாசல் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. 

    ஆற்றின் ஒரு பகுதியில் கரை உடைந்ததால், சூறக்காடு பகுதியில் 300 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ள பாதிப்பு காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான் இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். 

    மேலும் மாவட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மீட்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. 

    இதையும் படிங்க: சென்னையில் அதிர்ச்சி! வெடிகுண்டு தயாரிக்கும் பார்முலாவை குறிப்பெடுத்து வைத்திருந்த 3 பேர் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....