Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் அதிர்ச்சி! வெடிகுண்டு தயாரிக்கும் பார்முலாவை குறிப்பெடுத்து வைத்திருந்த 3 பேர் கைது

    சென்னையில் அதிர்ச்சி! வெடிகுண்டு தயாரிக்கும் பார்முலாவை குறிப்பெடுத்து வைத்திருந்த 3 பேர் கைது

    வட சென்னையில் வெடிகுண்டு தயாரிக்க குறிப்பு வைத்திருந்த 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    வட சென்னை, ராயபுரம், கல்மண்டபம் சாலையில், நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூன்று பேர் இரு சக்கர வாகனத்தில் அந்தப்பக்கமாக வந்தனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் அவர்கள், வேகமாக வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றனர். 

    இதனைக் கண்ட காவல்துறையினர், அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது, அந்த இரு சக்கர வாகனத்தின் பின்புறமாக அமர்ந்திருந்த நபர் மாட்டிக்கொண்டிருந்த பை ஒன்று கீழே விழுந்தது. 

    அதனைச் சோதனை செய்து பார்த்ததில், மறைந்த இந்திய தேசிய லீக் அமைப்பின் தலைவர் பழனிபாபா குறித்தும், அவருடைய கருத்துக்களும் புத்தகத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்தன. மேலும் அதனுடன் சில பேப்பர் கட்டிங் வைத்து இருந்ததும் தெரியவந்தது. 

    இதுதொடர்பாக உடனடியாக காசிமேடு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, அந்த 3 நபர்களையும் காசிமேடு சிக்னல் பகுதியில் காவல்துறயினர் மடக்கி பிடித்தனர். 

    பிறகு, அவர்கள் மூவரும் காவல்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களிடம் நேற்று நடைபெற்ற விசாரணையில், ஒருவர் புது வினோபா நகரைச் சேர்ந்த நாகூர் மீரான் வயது 22, நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த ஜாஹிர் உசேன் வயது 20, மற்றொரு நபர் அதே பகுதியைச் சேர்ந்த நவாஸ் வயது 19 என்பதும், இவர்கள் பர்மா பஸாரில் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. 

    இதில் நாகூர் மீரான் என்பவர் தேசிய லீக் கட்சியின் பகுதி செயலாளராக இருப்பதும், பழனிபாபா குறித்து சமூக வலைத்தளத்தில் பார்த்து தீவர ஆதரவாளராக மாறியதும் விசாரணையில் தெரியவந்தது . 

    இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவர்கள் மூன்று பேரின் வீட்டிலும் சோதனை நடத்தினர். அப்போது ஒரு புத்தகத்தில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? என்பது குறித்து எழுதி வைக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், இவர்கள் பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்தவர்களா? நாசா வேலையில் ஈடுபட முயன்றனரா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    இதையும் படிங்கஅதிமுக உட்கட்சி மோதல்: செய்நன்றி மறந்துவிட்டார் அன்பழகன்.. ஓ.பி.எஸ். ஆதரவாக ஓம்சக்தி சேகர் பேச்சு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....