Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்மீண்டும் தலை தூக்குகிறதா முதலாளித்துவம்! எலான் மஸ்கின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்

    மீண்டும் தலை தூக்குகிறதா முதலாளித்துவம்! எலான் மஸ்கின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்

    அலுவலகம் வந்து பணிபுரிய தயாராக இல்லாத ஊழியர்கள் வேலையை ராஜிநாமா செய்து விடலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் குறித்த பேச்சுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரியதாய் உருவெடுத்துள்ளது. இதற்கு முழு முக்கிய காரணம் எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியிருப்பதே. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக பதவியேற்ற பிறகு, ட்விட்டரில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஏதேனும் ஒரு அதிரடிச் செயலை தொடர்ந்து நிகழ்த்திய வண்ணம் உள்ளார். அந்த செயல்கள் சர்ச்சையிலும் சிக்கும் வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் முதல்முறையாக ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய பிறகு ட்விட்டர் ஊழியர்களிடத்தில் எலான் மஸ்க் பேசினார்.

    அவர் பேசியபோது, “செலவு குறைப்பு நடவடிக்கையாக 50 சதவீத ட்விட்டர் ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நீங்கள் அனைவரும் இனி வாரத்துக்கு 80 மணி நேரம் பணிபுரிய தயாராக இருக்க வேண்டும். வீடுகளில் இருந்து பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அலுவலகம் வந்து பணிபுரிய வேண்டும். அலுவலகம் வந்து பணிபுரிய தயாராக இல்லாத ஊழியர்கள் வேலையை ராஜிநாமா செய்து விடலாம். செலவைக் குறைத்து வருவாயைப் பெருக்காவிட்டால் ட்விட்டர் நிறுவனம் திவாலாகும்.” என்று தெரிவித்தார்.

    மேலும், ட்விட்டரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ப்ளூ டிக் கட்டணம் குறித்து தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மீண்டும் தடை வரும் – திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....