Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா2011-இல் நடந்த குண்டுவெடிப்பு; இன்று தொடங்கிய விசாரணை!

    2011-இல் நடந்த குண்டுவெடிப்பு; இன்று தொடங்கிய விசாரணை!

    மும்பையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான விசாரணை மீண்டும் 11 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியுள்ளது. 

    மும்பையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி ஜவேரி பஜார், தாதர், ஒபேரா ஹவுஸ் போன்ற மூன்று இடங்களில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 27 பேர் உயிரிழந்தனர். 127 பேர் காயம் அடைந்தனர். 

    இதையடுத்து தொடர்புடைய 11 நபர்கள் மீது மொக்கா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இவர்களில் ஒருவர் கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தார். மேலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் முஜாஹிதின் தீவிரவாத அமைப்பின் தலைவர் யாசின் பட்கல் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். 

    இந்நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நாகி ஷேக் என்பவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சிறப்பு நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதினார். 

    அதில், 11 ஆண்டுகள் ஆகியதன் காரணமாக விசாரணை தினமும் நடைபெற வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை தொடங்கி உள்ளது. 

    அதே சமயம், கடந்த 2019 ஆம் ஆண்டு 8 குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் மாநிலம் முழுவதிலும் உள்ள பல சிறைகளில் அடைக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட பிறகே, அவர்கள் மீதான குற்றங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டதால் விசாரணைக்கும் தாமதம் ஏற்பட்டகாக நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ‘உலக கோப்பைக்குப் பிறகு எனது இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியது’ – மனம் திறந்த மெஸ்ஸி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....