Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெளியானது, சிம்புவின் பத்து தல பாடல்!

    வெளியானது, சிம்புவின் பத்து தல பாடல்!

    நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பத்து தல திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நம்ம சத்தம்’ பாடல் இன்று வெளியாகியுள்ளது.

    ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம்தான், ‘பத்துதல’. கன்னட மொழியில் வெளிவந்து பெரியளவில் ஹிட் அடித்த ‘மஃப்டி’ என்ற திரைப்படத்தின் ரீமேக்தான், இந்த பத்து தல. 

    நெடுஞ்சாலை, ஜில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கிய கிருஷ்ணகுமார் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், கெளதம் கார்த்திக், டீஜே, கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படமானது வருகிற மார்ச் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பத்து தல திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நம்ம சத்தம்’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. 

    பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுதியிருக்கும் இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். இப்பாடலின் நடன இயக்குநராக சாண்டி பணியாற்றியுள்ளார். மேலும், வெளியாகியுள்ள பாடலில், நடிகர் சிம்புவடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடனம் ஆடுவது போல காட்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    “இதுதான் நான்” என அறிந்த சிம்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....