Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகடந்த ஆண்டு செப்டம்பரை காட்டிலும் இந்த ஆண்டு ஜிஎஸ்டி 26 சதவீதம் அதிகரிப்பு!

    கடந்த ஆண்டு செப்டம்பரை காட்டிலும் இந்த ஆண்டு ஜிஎஸ்டி 26 சதவீதம் அதிகரிப்பு!

    நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான சரக்கு மற்றும் சேவை வரியைக் காட்டிலும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி 26 சதவீதம் அதிகமாகும். 

    மத்திய நிதியமைச்சகம் நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை இன்று வெளியிட்டுள்ளது. 

    நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூபாய் 1,47,686 கோடி ஜிஎஸ்டி வரி வருவாய் வசூலாகி இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த செப்டம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி ரூ. 1,47,686 கோடியில், மத்திய ஜிஎஸ்டி ரூ.25,271 கோடியும் மாநில ஜிஎஸ்டி ரூ. 31,813 கோடியும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.80,464 கோடியும் (இறக்குமதியில் சேகரிக்கப்பட்ட ரூ.41,215 கோடி உட்பட) வசூலாகியுள்ளது. 

    மேலும், செஸ் வரி ரூ. 10,137 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்படும் ரூ. 856 கோடி உட்பட) வசூலாகியுள்ளதாக தனது அறிக்கையில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி 26 சதவீதம் அதிகமாகும்.

    இதையும் படிங்க: கட்டு கட்டுமாக சிக்கிய கள்ள நோட்டுகள்; போட்டி போட்டு எடுத்த பொதுமக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....