Saturday, March 16, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புசமையலில் உள்ள எளிமையான விஷயங்களை தெரிந்துள்ள சின்ன சின்ன கிட்சன் டிப்ஸ்...

    சமையலில் உள்ள எளிமையான விஷயங்களை தெரிந்துள்ள சின்ன சின்ன கிட்சன் டிப்ஸ்…

    கிராமத்து பெண்ணோ ,நகரத்து பெண்ணோ எல்லோருக்கும் சமையல் என்பது வந்துவிடாது .அவங்க ரொம்ப ருசியா சமைக்கிறாங்க …என்னால அப்படி சமைக்க முடியல ….எனக்கு சமையலுக்கான கை பக்குவம் இல்ல …இப்படி பொலம்பிக்கிட்டே சமைக்குறவங்க இங்க நெறைய பேர் இருகாங்க …

    நா பார்த்து பார்த்து சமைக்கிறே ..ஆனா எங்க என்ன தப்பு பன்றேன்னு தெரிய மாட்டேங்குது …இப்படி யோசிக்கிறவங்களு இருக்கத்தா செய்றாங்க .

    அப்படிப்பட்டவங்களுக்கான சின்ன சின்ன கிட்சன் டிப்ஸ்தா நா இப்ப சொல்ல போறே.., வாங்க பாக்கலாம்…

    1.தோசை சுடுறது ஈஸியா தெரிஞ்சாலும் எல்லாருக்குமே ருசியாவும் ,பார்க்க அழகாவும் வருமான்னா சந்தேகம்தா.காரணம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமான முறைகள கையாள்வாங்க .அந்த வகையில நா இப்ப சொல்ல போறது என்னன்னா தோசை சுடும் போது அதிமான என்ன செல்வாகுது ,இத எப்படி கொறச்சு ருசியா தோசை சுடுறதுன்னு ?யோசிக்கிற நபரா நீங்க ,ஒரு தடவ இந்த முறையை கையாண்டு பாருங்க .,என்னையும் கொறையும் ,தோசையும் ருசியா வரும்.

    * தோசை சுடும் முன்பு தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெயும், உப்பும் கலந்து தேய்த்தால் தோசை சுட அதிக எண்ணெய் தேவைப்படாது.அதேமாதிரி தோசை மாவில் தேங்காய்ப்பால் கலந்து தோசை சுட்டால் , தோசை வாசமாகவும், அதிக சுவையுடனும் இருக்கும்.

    இதையும் படிங்க: திடீரென மனிதனின் வயிற்றில் வளர்ந்த அத்தி மரம்! பீதியை கிளப்பிய ஓர் அதிர்ச்சி சம்பவம்

    2.அதே போல்தாங்க சமையலை சீக்கிரமாவே முடிக்க வேண்டும் என்று சாம்பார் வச்சுடுவாங்க .அப்ரோ அது கெட்டு போய்டுமோன்ற பயத்துல,அடிக்கடி சூடு பண்ணிக்கிட்டே இருப்பாங்க .அவங்களுக்கு இந்த டிப்ஸ்.

    * சாம்பார் அதிக நேரம் கெட்டுப் போகாமலிருக்க பருப்பு வேக வைக்கும்போது அதனுடன் 2 கிராம்பு சேர்த்து வைத்தால் ,சாம்பார் சீக்கிரம் கேட்டும் போகாது .,. கூடுதல் மணமாவும் இருக்கும்.

    3.அரிசி உப்புமா செய்யும்போது தேங்காய் இல்லையா, அல்லது குறைவாக உள்ளதா, கவலை வேண்டாம். தாளிக்கும் எண்ணெயுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டால் தேங்காய் சேர்த்த அதே வாசனையுடன் ருசியிலும் குறைவிருக்காது.

    4.நெடி அடிக்காமல் மிளகாய் வற்றலை வறுக்க, வத்தலின் காம்பை ஒடித்துவிட்டு பின் வறுத்தால் நெடி அடிக்காது.

    5.இட்லிக்கு ஆட்டிய மாவில் 4 வெற்றிலைகளின் காம்பை நீக்கி விட்டுப் போட்டால் பொங்கி வழியாது.

    6.இட்லி ,மிளகாய்ப்பொடி அரைக்கும் போது சிறிது கொப்பரைத்தேங்காய் சேர்த்து வறுத்து அறைத்தால் ,அதன் சுவை மணம் கூடும் .வேர்கடலையும் வறுத்து சேர்த்துக்கொள்ளலாம் .

     

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....