Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகோயிலில் உணவு சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 21 பேர் மயக்கம்

    கோயிலில் உணவு சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 21 பேர் மயக்கம்

    உத்தர பிரதேச மாநிலத்தில் கோயிலில் உணவு சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 21 பேர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

    உத்தர பிரதேச மாநிலம், பாக்பத்தில் அமைந்துள்ள கோயிலில் மத சமூக விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் கிச்சடி வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 21 பேர் மயக்கம் அடைந்தனர். 

    இந்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கிச்சடி சாப்பிட்ட 21 பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

    மேலும் இதில் மூன்று குழந்தைகளின் உடல்நிலை மிகவும் கவலைக் கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றவர்களின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் விருந்தில் உணவு சாப்பிட்ட மக்களுக்கு இப்படி உடல்நிலை சரி இல்லாமல் சென்றது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    36 கட்களுக்குப் பிறகு மூச்சு விட்ட தசரா; ரிலீஸுக்கு தயார்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....