Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்36 கட்களுக்குப் பிறகு மூச்சு விட்ட தசரா; ரிலீஸுக்கு தயார்..

    36 கட்களுக்குப் பிறகு மூச்சு விட்ட தசரா; ரிலீஸுக்கு தயார்..

    தசரா படத்தில் 36 கட்களுக்குப் பிறகு  தணிக்கைக் குழுவினர் யூ/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். 

    தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் வருகிற 30-ஆம் தேதி வெளியாகவுள்ள படம், தசரா. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் தீக்‌ஷித் ஷெட்டி, பிரகாஷ் ராஜ், பூர்ணா உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

    பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இந்தப் படம் சமீபத்தில் சென்சாருக்கு சென்றது. இந்தப் படத்தை சமீபத்தில் தணிக்கைக் குழுவினர் பார்த்தனர். இதைத்தொடர்ந்து, படத்தின் சில இடங்களில் ஆபாச வசனங்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

    இதனால், அதை நீக்கச் சொன்ன அதிகாரிகள், மது குடிக்கும் காட்சிகள் இடம்பெறும் இடத்தில் வரும் சப் டைட்டிலின் எழுத்துருவை பெரிதாக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர். இருப்பினும், படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைக்கவில்லை. 

    இதைத்தொடர்ந்து, சில வசனங்களை மியூட் செய்து 36 கட்களுக்குப் பிறகு  தணிக்கைக் குழுவினர் தசரா படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். 

    செயற்கைக்கோள்கள் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டதா? – இஸ்ரோ சொன்ன பதில்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....