Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமீண்டு விஸ்வரூபம் எடுக்கிறதா கொரோனா?

    மீண்டு விஸ்வரூபம் எடுக்கிறதா கொரோனா?

    நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்றைய தொற்று பாதிப்பு 1,890 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 1,809 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

    அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 397 பேரும், குஜராத் மாநிலத்தில் 303 பேரும், கேரள மாநிலத்தில் 299 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    இதைத்தொடர்ந்து, கர்நாடகாவில் 209 பேரும், தில்லியில் 153 பேரும் கொரோனா தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ளனர். இதன்படி, இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 5 ஆயிரத்து 952 ஆக அதிகரித்துள்ளது. 

    அதே சமயம், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 932 பேர் குணமடைந்தனர். இதன்படி இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 64 ஆயிரத்து 815 பேர் குணமடைந்துள்ளனர். 

    மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,30,837 ஆக அதிகரித்துள்ளது. 

    செயற்கைக்கோள்கள் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டதா? – இஸ்ரோ சொன்ன பதில்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....