Sunday, March 24, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்புரோமஷன் பணிகளில் மந்தம் காட்டும் 'விடுதலை' படக்குழு..

    புரோமஷன் பணிகளில் மந்தம் காட்டும் ‘விடுதலை’ படக்குழு..

    வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தின் புரோமஷன் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். 

    வடசென்னை, அசுரன் திரைப்படத்தின் வெற்றிகளைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம், விடுதலை. இத்திரைப்படத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய்சேதுபதி மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க, சூரிக்கு நாயகியாக பவானி ஶ்ரீ நடித்துள்ளார். 

    இளையராஜா இசையமைத்துள்ள இத்திரைப்பட்ம  இரு பாகங்களாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. வெளிவந்த நாள் தொட்டே சினிமா ரசிகர்கள் விடுதலை அப்டேட்களுக்காக காத்திருக்க தொடங்கினர். 

    இந்நிலையில், விடுதலை படம் வருகிற 31-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு, படத்தின் டிரைலர், மேக்கிங் வீடியோ போன்றவை வெளியிடப்பட்டு வருகின்றன. 

    அதேநேரம், விடுதலை படத்தின் புரோமஷன் பணிகள் மிகவும் மந்தமாக உள்ளதாக சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் தரப்பில் இருந்தும் கூறப்படுகிறது. இருப்பினும், நடிகர் சூரி மட்டும் விடுதலை படத்திற்காக சுற்றி சுற்றி புரோமஷன் செய்து வருகிறார். 

    36 கட்களுக்குப் பிறகு மூச்சு விட்ட தசரா; ரிலீஸுக்கு தயார்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....