Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபிசிசிஐ ஒப்பந்தம்; ரூ.7 கோடி ஊதியம் பெறப்போகும் ஜடேஜா

    பிசிசிஐ ஒப்பந்தம்; ரூ.7 கோடி ஊதியம் பெறப்போகும் ஜடேஜா

    பிசிசிஐ அணி வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியலில் ரவீந்திர ஜடேஜா கிரேட் ‘ஏ+’ என்ற உயர் நிலைக்கு முன்னேறியுள்ளார். 

    இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களின் பிசிசிஐ ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு மாறுபாடுகள் நிகழ்ந்துள்ளன. கிரேட் ‘ஏ+’ நிலைக்கு ரவீந்திர ஜடேஜா உயர்ந்துள்ளார்.

    அதேநேரம், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா கிரேட் ஏ-வில் இணைந்தனர். இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் முறையே ‘பி’ மற்றும் ‘சி’ கிரேடில் இருந்தவர்கள். சுப்மன் கில் மற்றும் சூரியகுமார் யாதவ் கிரேட் ‘சி’-யிலிருந்து ‘பி’ கிரேடுக்கு முன்னேறியுள்ளனர்.

    மேலும், கே.எல்.ராகுல், ஏ கிரேடிலிருந்து ‘பி’ கிரேடுக்கு இறக்கப்பட, ஷர்துல் தாக்கூர்  ‘பி’ கிரேடில் இருந்து ‘சி’-கிரேடுக்கு இறக்கப்பட்டுள்ளார்.

    கிரேட் ‘சி’ படிநிலையில் புதிய வீரர்களாக குல்தீப் யாதவ், இஷான் கிஷன், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். 

    கிரேட் ஏ+ படிநிலையில் உள்ளவர்களுக்கு சம்பளம் ரூ.7 கோடி என்றும், கிரேட் ஏ பிரிவில் உள்ளவர்களுக்கு சம்பளம் ரூ. 5 கோடி என்றும், கிரேட் பி படிநிலையில் உள்ளவர்களுக்கு ரூ.3 கோடி என்றும், கிரேட் சி பிரிவில் உள்ளவர்களுக்கு ரூ.1 கோடி என்றும் ஒப்பந்தம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    36 கட்களுக்குப் பிறகு மூச்சு விட்ட தசரா; ரிலீஸுக்கு தயார்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....