Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகந்துவட்டிக் கொடுமை; ஈரோட்டில் தீக்குளிக்க முயன்ற குடும்பம்

    கந்துவட்டிக் கொடுமை; ஈரோட்டில் தீக்குளிக்க முயன்ற குடும்பம்

    கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது மனுக்களை அலுவலகத்தில் வழங்கிக் கொண்டிருந்தனர். 

    இந்நிலையில், இன்று மதியம் 1 மணி அளவில் நுழைவு வாயிலின் முன்பகுதியில் காவல்துறையினர் நின்றுக் கொண்டிருந்தனர். அந்த சமயம் அறச்சலூரை அடுத்த வடுக்கப்பட்டி ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த குமார் (36) என்பவர் தனது குடும்பத்துடன் உள்ளே நுழைந்து, தனது இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன்மீது ஊற்றிக் கொண்டு பற்றவைக்க முயன்றார். 

    இதனைக்கண்டதும் அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் அங்கிருந்த தண்ணீரை எடுத்து அவர்மீது ஊற்றி, கையில் இருந்த பெட்ரோலையும் பறித்துக் கொண்டனர். 

    இதைத்தொடர்ந்து, குமார் மற்றும் அவரது மங்கம்மாளிடம் காவல்துறையிடம் விசாரணை நடத்தினர். அப்போது குமார், வடுக்கப்பட்டி ஜெ.ஜெ.நகரில் பொம்மை செய்யும் தொழில் செய்து வருவதாகவும் குடும்ப சூழ்நிலைக்காக அதே ஊரைச் சேர்ந்த காளியப்பன் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாயும், மாதப்பன் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாயும், படையப்பனிடம் 20 ஆயிரம் ரூபாயும் வன்னியர் என்பவரிடம் 80 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 2.5 லட்சத்தை 4 ஆண்டுகளுக்கு முன்பு கடனாக பெற்றதாக கூறினார். 

    மேலும் இதற்கு 100 ரூபாய்க்கு 10 ரூபாய் வீதம் என வட்டி வசூலிப்பதாகவும், ஒவ்வொரு வாரமும் மாதமும் தன்னால் வட்டி மட்டும் தான் கட்ட முடிவதாக தெரிவித்த குமார், அசலைக் கட்ட முடியவில்லை எனவும் வட்டி கட்டவில்லை என்றால் அபராத வட்டி என கூறி இரட்டை வட்டி வசூலிப்பதாகவும் கூறினார்.   

    இதுவரை வாங்கிய அசலைவிட ஒன்றரை மடங்குக்கு மேல் வட்டி கட்டி விட்டதாகவும், வட்டியும் அசலையும் கட்டாததால் தங்களது மகனைப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலைக்கு சேர்த்தாகவும் அவர் கூறினார். 

    இந்தக் கந்துவட்டி காரணமாக தனது மனைவி, மகளை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாகவும் கூறிய குமார், இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும், குடும்பத்தாரைக் காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். 

    இதைத்தொடர்ந்து, அவர்களை சமாதானம் செய்த மக்கள் குறை தீர்க்கும் அதிகாரிகளும் காவல்துறையினரும் இந்தச் சம்பவம் தொடர்பாக அறச்சலூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க அறிவுரை கூறினர். மேலும் இந்தச் சம்பவம் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    பிசிசிஐ ஒப்பந்தம்; ரூ.7 கோடி ஊதியம் பெறப்போகும் ஜடேஜா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....