Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுடிஎன்பிஎஸ்சி குரூப் 4: 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வி

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4: 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வி

    குரூப் 4 தேர்வில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வி அடைந்ததாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கடந்த மார்ச் 24 ஆம் தேதி அன்று குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் பல தேர்வர்கள் தங்களுக்கு தேர்வு முடிவுகள் வரவில்லை என தெரிவித்தனர். அதே சமயம் பலர் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தனர். 

    இந்நிலையில், தேர்வு முடிவுகள் வராத தேர்வர்கள் சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கொண்டுவந்த மனுக்களை அளித்தனர். 

    இதனிடையே, 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வி அடைந்ததால் அவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

    மேலும், இதுகுறித்து வருகிற புதன்கிழமை டிஎன்பிஎஸ்சி தலைவர், தலைமையில் ஆணைய கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கந்துவட்டிக் கொடுமை; ஈரோட்டில் தீக்குளிக்க முயன்ற குடும்பம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....