Monday, March 25, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நலன் குமரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தியா ?

    நலன் குமரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தியா ?

    நலன் குமரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிக்க உள்ள படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது. 

    நடிகர் கார்த்தி தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜப்பான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக அனு இமானுவேல் நடிக்க,  விஜய் மில்டன், தெலுங்கு நடிகர் சுனில் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    மேலும், ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்திற்கு அடுத்து நடிகர் கார்த்தி ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ மற்றும் ‘எனக்குள் ஒருவன்’ போன்ற படங்களை இயக்கிய நலன் நலன் குமரசாமி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. 

    இந்நிலையில், இப்படத்தின் பூஜை சென்னையில் எளிமையாக நேற்று நடந்தது. படக்குழுவினர் மட்டும் இதில் கலந்துகொண்டனர். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படம் ‘மசாலா படங்களுக்கு ட்ரிபியூட்’ என்ற அறிவிப்போடு  வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4: 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வி

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....